மாசிலிருந்து காவிரி ஆற்றை மீட்க புதிய திட்டம்: முதல்வர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2019 12:49 pm
tn-assembly-highlights

காவிரி ஆறு மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க ஒரு புதிய திட்டத்தினை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "காவிரி ஆறு மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க, ஒரு புதிய திட்டத்தினை தொடங்கவுள்ளது 'நடந்தாய் வாழி காவேரி' என்ற திட்டத்தினை தொடங்க அரசு முடிவு செய்து திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது. 

இதே போல் பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்கவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close