சென்னையில் இன்று மாலை அல்லது இரவு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2019 12:56 pm
chennai-weather-report

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், "குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதிகபட்சமாக நீலகிரி, கோவையில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை இன்று மாலை அல்லது இரவில் மழை பெய்யும். 

மாலத்தீவு, அந்தமான் தீவு, மன்னரை வளைகுடா, தெற்கு வங்கக்கடல்  பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் அடுத்த இரு தினங்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

கடந்த 24 மணி நேரத்தில் அரியலூரில் 9 செமீ, திருவண்ணாமலையில் 8 செமீ, விழுப்புரத்தில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close