44 ஏக்கரில் புதிதாக பிரமாண்ட பேருந்து நிலையம்: ஓ.பி.எஸ்.

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2019 02:50 pm
new-bus-terminus-work-will-complete-within-two-years-ops

"கிளாம்பாக்கத்தில், 44 ஏக்கர் பரப்பளவில், 394 கோடி ரூபாய் பொருட் செலவில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இணையாக புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி, இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும்" என, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

சட்டசபையில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசுகையில், ‛‛சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நிகராக, கிளாம்பாக்கத்தில், இன்னொரு பிரமாண்ட பேருந்து நிலையம் அமைக்கும் பணியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. 

394 கோடி ரூபாய் செலவில், 44 ஏக்கர் பரப்பளவில் அமையும் இந்த பேருந்து நிலையம், பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த பணிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும்’’ என்றார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close