மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை!

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2019 09:49 am
athivarathar-postal-stamp

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் வைபவ விழாவை முன்னிட்டு அதற்கான சிறப்பு அஞ்சல் தலையை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. 

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் தரிசனம் கிடைப்பதால், அதனை சிறப்பிக்கும் பொருட்டும், மக்களிடையே அஞ்சலகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அத்திவரதர் வைபவ விழா அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது. வைபவ விழாவில் இந்த அஞ்சல் தலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் விலை 20 ரூபாய்.

அத்திவரதர் நினைவாக பெரும்பாலான பக்தர்கள் இதனை வாங்கிச் செல்கின்றனர் என்று அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மேலும், அஞ்சல் துறை சேவையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு வித்தியாசமான முயற்சியாகவும் இது பொதுமக்களிடையே பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close