மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2019 10:17 am
kanimozhi-press-meet

மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். 

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி கனிமொழி, "தமிழ் வளர்ச்சிக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது.

உணவு பாதுகாப்பு என்பது மக்களுக்கு அத்தியாவசியமானது ; முக்கியமானது. எனவே விளைநிலங்களில்  ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாது" என்று அவர் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close