ஆசிரியர் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2019 03:27 pm
teacher-counseling-will-be-conducted-annually-minister-sengottaiyan

ஆண்டுதோறும் ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " 2013, 2014 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதி 82,000 பேர் பணி வாய்ப்பிற்காக காத்திருப்பதாகவும், ஆண்டுதோறும் ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பாடவாரியாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். 

மாணவர்கள் இல்லாத 45 பள்ளிகளில் தற்காலிக நூலகங்கள் அமைக்கப்படும் என குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டு 1 லட்சத்து 68ஆயிரத்து 414 மாணவர்கள் அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அரசு பள்ளிகளை ஊக்கப்படுத்தினால் மட்டுமே பள்ளிகளை மேம்படுத்த முடியும் என்றும் அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எனவும் கேட்டுக்கொண்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close