"அத்திவரதர் தரிசனம் : ஆட்சியர் கூறியது நல்லதுக்கு தான்"

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2019 06:01 pm
the-collector-s-suggestion-not-to-come-is-for-good

அத்திவரதரை தரிசிக்க முதியோர்கள் வர வேண்டாம் என ஆட்சியர் கூறியது நல்ல நோக்கத்திற்காகதான், யாரும் வரக்கூடாது என்பதற்கு அல்ல என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். முதியோர், கர்ப்பிணிகள் வந்தாலும் அவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், முக்கிய பிரமுகர்கள் வருகையால் பக்தர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவி்த்துள்ளதாக சண்முகம் கூறியுள்ளார்.

முதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அத்திவரதரை தரிசிக்க வரவேண்டாம் என்று காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், ஆட்சியர் இப்படி கூறியதற்கு பொன்.ராதா கிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close