வேலூர் மக்களவை தேர்தல் முன்னேற்பாடு: துணை ராணுவப்படையினர் வருகை!

  அனிதா   | Last Modified : 21 Jul, 2019 05:57 pm
vellore-lok-sabha-election-paramilitary-forces-arrive

வேலூர் மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 2 கம்பெனி துணை ராணுவப்படையினர் இன்று வேலூர் வந்தனர். 

வேலூர் தொகுதியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி மக்களை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 11 ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி நிறைவடைந்தது. இதை தொடர்ந்து 19 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில் 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 2 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் இன்று வேலூர் வந்தனர். ஒரு கம்பெனிக்கு 90 பேர் என மொத்தம் 180 துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close