22வது நாளாக அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர் கூட்டம்!

  அனிதா   | Last Modified : 22 Jul, 2019 09:02 am
devotees-gather-to-see-the-athivarathar-on-22nd-day

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க 22 வது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்புரிவதால், பெருமாளை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

வார விடுமுறையையொட்டி கூட்டம் அலை மோதி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் குறைந்திருந்தது. இதனால் கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் 22வது நாளான இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடுப்பட்டுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close