தமிழ் மொழி வரலாறு குறித்த பாடம் திருத்தப்படும் : செங்கோட்டையன்

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2019 10:23 pm
tamil-language-revision-of-the-history-lesson

பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி வரலாறு குறித்த பாடம் திருத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழைவிட மூத்தமொழி சமஸ்கிருதம் என உள்ளது என்றும், தமிழ்மொழி கி.மு.300 ஆண்டுகள் முன்னர்தான் தோன்றியது எனவும் பிளஸ் 2 ஆங்கிலப் பாடப்புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி வரலாறு குறித்த பாடம் திருத்தப்படும் என்றும், பாடப் புத்தகத்தில் தமிழ் பற்றி தவறாக குறிப்பிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், உலகிலேயே மூத்த மொழி தமிழ் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை என்றும் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close