‘மார்க்கெட்டுக்கு செல்வது, டீ குடிப்பது என ஏமாற்றுபவர் ஸ்டாலின்’

  Newstm Desk   | Last Modified : 27 Jul, 2019 10:01 pm
stalin-cheats-on-going-to-market-drinking-tea-cmpalanisamy

ஐஎஸ்ஐ பொருந்திய தரமான இயக்கம் அதிமுக; முத்திரை இல்லா தரமில்லாத இயக்கம் திமுக என்று, ஆம்பூரில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி இவ்வாறு பேசினார். 

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாதபோது எப்படி வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பிய முதல்வர், மார்க்கெட் பகுதிக்கு செல்வது, டீ குடிப்பது என மக்களை ஏமாற்றுபவர் ஸ்டாலின் என்று விமர்சித்துள்ளார்.

மேலும், ‘உண்மையை சொன்னால் வெற்றிபெற முடியாது என்பதால் பொய் வாக்குறுதிகளை கொடுத்தார் ஸ்டாலின். அதிமுகவில் வாரிசு இல்லை; யாரும் பொறுப்புக்கு வரலாம். சொன்னசொல்லை விவசாயிகள் காப்பாற்றுவார்கள்; நான் உள்பட பல அமைச்சர்களும் விவசாயிகள்தான்’ என்றும் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close