தீ விபத்தால் பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பு!

  அனிதா   | Last Modified : 01 Aug, 2019 09:04 am
bsnl-service-affected-by-fire

சென்னை மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பிஎஸ்என்எல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சர்வர்கள் பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று பி.என்.எல் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் தீ விபத்து காரணமாக  செல்போன், லேண்ட்லைன், இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையின் பல்வேறு இடங்களில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close