ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு ஜாமீன்!

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2019 11:55 am
rasipuram-babies-kidnapped-case-bail-approved-for-convicts

ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 4 பேருக்கு ஜாமீன் வழங்கி நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் நகராட்சி ஊழியராக பணிபுரியும் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்றுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரத்தில் செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றக்காவலில் வைத்து குற்றவாளிகளிடம் விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், அமுதா, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 பேர்  நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையில் செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் இடைத்தரகர் லீலா ஆகிய நால்வருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close