நாளை மாலை 5 மணி முதல் 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க முடியாது!

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2019 06:36 pm
athivaradhar-will-not-be-able-to-visit-tomorrow-from-5-pm-to-8-pm

ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற இருப்பதால் பிற்பகல் 2 மணிக்கு கிழக்கு வாசல் மூடப்படும் என்றும், திருக்கல்யாணத்தை முன்னிட்டு நாளை மாலை 5 மணி முதல் 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க முடியாது என்றும் ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ஆகஸ்ட் 17-ஆம் தேதி மாலை 5 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவுபெறும். அன்றைய தினத்தில் தரிசனம் முடிந்தவுடன் ஆகம முறைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்திவரதரை தரிசிக்க விடுமுறை நாட்களில் தான் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

அத்திவரதர் சிலை நன்கு உறுதித்தன்மையுடன் தான் இருக்கிறது’ என்றும் ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார். கடந்த 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் நேற்று காலை முதல் நின்ற கோலத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close