2020ம் ஏப்ரல் 1ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு!

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2019 11:47 am
census-will-be-starts-from-april-1-2020

2020ம் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், கடைசியாக 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து, 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு கணக்கெடுப்பு பணி 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி  செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை நடைபெறும் மத்திய அரசு இன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

அசாம் மாநிலத்தை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும்  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு விவரங்களை சேகரிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close