இளம் மஞ்சள் நிற பட்டாடையில் அருள்பாலிக்கும் அத்திவரதர்!

  அனிதா   | Last Modified : 04 Aug, 2019 04:05 pm
athi-varathar-darshan

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள அத்திவரதர் 35ஆம் நாளான இன்று இளம் மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்புரிவதால், பெருமாளை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

கடந்த 34 நாட்களில் மட்டும் 45 லட்சத்திற்கும் அதிகமானோர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். 35 ஆம் நாளான இளம் மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதிகாலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close