தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வீட்டு வசதித்துறை முதன்மை செயலாளராக ராஜேஷ் லக்கானி, சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக அமுதவல்லி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநராக மதிவாணன், நகரமைப்புத் திட்டமிடல் இயக்குநராக சந்திரசேகர் சகாமுரி, சி.எம்.டி.ஏ உறுப்பினர்/செயலாளராக கார்த்திகேயன், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலராக சம்பத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in