அத்திவரதர் வைபவ சிறப்பு ஏற்பாடு: காஞ்சிபுரத்திற்கு சிறப்பு நிதி!

  அனிதா   | Last Modified : 07 Aug, 2019 03:48 pm
special-fund-for-kanchipuram

அத்திவரதர் வைபவத்திற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த காஞ்சிபுரம் நகராட்சிக்கு சிறப்பு நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபம் ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. வைபவம் முடிய 10 நாட்களே உள்ள நிலையில், பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், வயது முதிர்ந்தவர்கள், மாற்று திறனாளிகள் அமர்ந்து செல்ல கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும், தூய்மை பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் துப்புரவு பணியாளர்களை பெருநகர சென்னை மாநகராட்சியில் இருந்து அனுப்ப வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் வைபவத்திற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த காஞ்சிபுரம் நகராட்சிக்கு சிறப்பு நிதி வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.  பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close