முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2019 05:24 pm
the-statue-of-former-chief-minister-karunanidhi-opens

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஓராண்டு நினைவு நாளையொட்டி அவரது சிலையை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று திறந்து வைத்தார்.

கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி,  சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். 

இந்த விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தி.க.தலைவர் கீ.வீரமணி, வைரமுத்து, திமுக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

6.5 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் கருணாநிதி எழுதுவதுபோன்று வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் பீடத்தில் கருணாநிதியின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close