கபினியில் இருந்து 40,000 கன அடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

  அனிதா   | Last Modified : 08 Aug, 2019 10:18 am
40-000-cubic-feet-of-water-opening-from-cabini

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

கார்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன. தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. 

தற்போது, வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், மேலும் நீர் வரத்து அதிகரிக்கலாம் என்பதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close