நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு: ஐ.ஜி தலைமையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை!

  Newstm Desk   | Last Modified : 09 Aug, 2019 11:06 am
cbcid-police-investigation-at-nellai

நெல்லை முன்னாள் மேயர் உள்பட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஐ.ஜி தலைமையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் வசித்து வந்த அம்மாவட்ட முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய 3 பேரும் கடந்த ஜூலை 23ம் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பாக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், முறையான தடயங்கள் எதுவும் கிடைக்காததால் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி காவல்துறை டிஜிபி உத்தரவிட்டார். 

இந்நிலையில், சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தலைமையில் சிபிசிஐடி போலீசார் நெல்லையில் கொலை நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்மந்தப்பட்டவர்களிடமும் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close