வேலூரில் அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

  Newstm Desk   | Last Modified : 09 Aug, 2019 07:19 pm
polling-was-held-peacefully-in-vellore-chief-election-officer-of-tamil-nadu

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற்றது என்று, சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், விவிபேட் இயந்திரங்களும் சரியாக செயல்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படவில்லை. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்’ என்றார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close