தொடரும் கனமழை: அவலாஞ்சியில் 45 செ.மீ. மழை பதிவு!

  அனிதா   | Last Modified : 10 Aug, 2019 08:33 am
continuous-heavy-rain-avalanche-45-cm-rain-log

 நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் வராலாறு காணாத அளவிற்கு கடந்த 4 நாட்களில் மட்டும் 258 செ.மீ மழை பெய்துள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் அவலாஞ்சியில் 45 செ.மீ மழை பதிவாகியுள்ளது. முன்னதாக கடந்த 6ஆம் தேதி 40 செ.மீ மழையும், 7ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக 82 செ.மீ மழையும், 8ஆம் தேதி வரலாறு காணாத அளவுக்கு 91 செ.மீ மழையும் பெய்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் அவலாஞ்சியில் 258 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close