மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்! - வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 10 Aug, 2019 12:45 pm
cmc-weather-report

தென் தமிழகக் கடற்கரையோரப் பகுதி மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், "மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. பவானியில் 19 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. கடலில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால், அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழக கடற்கரையோரப் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் படிப்படியாக மழை குறையும் வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close