கிருஷ்ணா நதியிலிருந்து தமிழகத்திற்கு 8 டி.எம்.சி நீர் திறப்பு!

  Newstm Desk   | Last Modified : 10 Aug, 2019 04:20 pm
8-tmc-water-to-be-released-from-krishna-river

கிருஷ்ணா நதியிலிருந்து 8 டி.எம்.சி தண்ணீரை சென்னைக்கு திறந்துவிட ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஒப்புக்கொண்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்கும் பொருட்டு தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஜெயக்குமார் ஆந்திராவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இன்று ஆந்திர முதலமைச்சரை சந்தித்து கிருஷ்ணா நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வரும் நிலையில், அதனை கைவிடவும் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. 

இதையடுத்து, கிருஷ்ணா நதியிலிருந்து 8 டி.எம்.சி தண்ணீரை சென்னைக்கு திறந்துவிடப்படவுள்ளது. கோரிக்கையை நிறைவேற்றிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close