அமித் ஷாவும், மோடியும் கிருஷ்ணன் - அர்ஜுனன் போன்றவர்கள்: ரஜினி அதிரடி பேச்சு

  Newstm Desk   | Last Modified : 11 Aug, 2019 11:32 am
rajinikanth-speech-about-amit-shah-modi

அமித் ஷாவும், பிரதமர் மோடியும் கிருஷ்ணன் - அர்ஜுனன் போன்றவர்கள் என சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். 

நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை தந்துள்ளார். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், அரசியல் பிரமுகர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். 

விழாவில் பேசிய ரஜினிகாந்த், "துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிறந்த ஆன்மீக வாதி. தப்பித்தவறி அவர் அரசியல்வாதி ஆகிவிட்டார். 

அமித் ஷாவும், பிரதமர் மோடியும் கிருஷ்ணன் - அர்ஜுனன் போன்றவர்கள். காஷ்மீர் விவகாரத்திற்காக நடவடிக்கை எடுத்த அமித் ஷாவுக்கு வாழ்த்துக்கள்" என்று பேசியுள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close