நீலகிரி மழை,வெள்ளம் : அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 11 Aug, 2019 08:55 pm
stalin-s-indictment-of-nilgiri-rains-and-floods

நீலகிரியில் மழை குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு, மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, உதவிகளை வழங்கினார். 

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் சேரன்பாடியில் வெள்ள நிவாரன முகாமில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘நீலகிரியில் மழை குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. முன்னெச்சரிக்கையின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதால் சென்னையை வெள்ளம் சூழ்ந்தது. மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் எடுத்துரைப்பேன்’ என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close