பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருப்பேன்: ரவீந்திரநாத் குமார்

  அனிதா   | Last Modified : 12 Aug, 2019 09:08 am
i-will-support-pm-modi-ravindranath-kumar

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வரும் திட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருப்பேன் என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " புதிய இந்தியாவை கட்டமைக்கும் சிறப்பான நிர்வாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வரும் திட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருப்பேன் எனவும் தெரிவித்தார். 

முதுகெலும்பு சர்ச்சை குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, அது குறித்து டி.ஆர்.பாலுவிடம் தான் கேட்க வேண்டும் என கூறினார். விமர்சனங்களை பெரிதாக கருத்தில் கொள்வதில்லை என குறிப்பிட்ட ரவீந்திரநாத் நாட்டின் உரிமைக்காக தான் குரல் கொடுத்தேன் என தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close