அத்திவரதர் தரிசன நாட்கள் நீட்டிக்கப்படாது: ஆட்சியர் பொன்னையா

  Newstm Desk   | Last Modified : 12 Aug, 2019 03:14 pm
the-days-of-the-vision-of-the-athivaradhar-will-not-be-extended-collector-ponnia

அத்திவரதர் தரிசன நாட்கள் நீட்டிக்கப்படும் என்று பரவும் தகவலில் உண்மையில்லை என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் அளித்த பேட்டியில், ‘அத்திவரதர் மீண்டும் வரும் 17-ஆம் தேதி அனந்த சரஸ் குளத்திற்குள் கொண்டு செல்லப்படுவதில் மாற்றமில்லை. ஆகம விதிப்படி ஆகஸ்ட் 17-ஆம் தேதி மாலையோ அல்லது இரவோ குளத்திற்குள் அத்திவரதர் கொண்டு செல்லப்படுவார். அத்திவரதர் தரிசன நாட்கள் நீட்டிக்கப்படும் என்று பரவும் தகவலில் உண்மையில்லை’ என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

மேலும், ‘தற்போது வரை சுமார் 80 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர். காணிக்கை மூலமாக 5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கார் பார்க்கிங் பகுதி அருகே பக்தர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கழிவறை, குடிநீர் வசதியை முக்கியமான இடங்களில் ஏற்பாடு செய்துள்ளோம். காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நள்ளிரவு 12 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது’ என்றும் ஆட்சியர் பொன்னையார் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close