5 தடுப்பணைகள் கட்ட திட்டம்: முதலமைச்சர் ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 13 Aug, 2019 10:27 pm
5-dams-to-build-the-project-chief-minister-tweet

மேட்டூர் அணையில் இருந்து கொள்ளிடம் வரை கிட்டத்தட்ட 5 தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரின் பதிவில், ‘டெல்டா விவசாயிகளுக்கு தேவையான நீர் முழுவதும் இந்த ஆண்டு வழங்கப்படும். ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளை தூர்வாருவதற்கு ரூ.1,250 கோடி ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கப்பட்டுள்ளன. குடிமராமத்து திட்டப் பணிகளுக்கு இந்த ஆண்டு ரூ.500 கோடியில் 1,829 ஏரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. சேலம் மாவட்டம் தலைவாசலில் 1200 ஏக்கரில் ரூ.1000 கோடியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா உருவாக்கப்படும்’ என்றும்  முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close