கர்நாடகா அணைகளில் இருந்து 62,225 கன அடி நீர் திறப்பு!

  அனிதா   | Last Modified : 14 Aug, 2019 08:38 am
62-225-cubic-feet-of-water-discharge-from-karnataka-dams

கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 62,225 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக அணைகள், நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.  இதனால் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது, கர்நாடகாவில் மழை குறைந்துள்ளதால் காவிரியில் திறக்கும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. 

நேற்றைய தினம் 2 லட்சம் கன அடி  தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 62, 225 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. கபினி அணையில் இருந்து  32,708 கன அடி நீரும், கே.ஆர்.எஸ் 29,517 கன அடி நீரும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close