ஒகேனக்கல் அருவியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சேதம்!

  அனிதா   | Last Modified : 14 Aug, 2019 09:38 am
damaged-on-security-arrangements-at-hogenakkal-falls

ஒகேனக்கல் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சேதமடைந்துள்ளன. 

கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தரைப்பாலம், சாலைகள் போன்றவை சேதமடைந்தன. இந்நிலையில் ஒகேனக்கல் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கண்காணிப்பு கேமராக்கள், பெண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர், தொங்கு பாலத்தில் ஏறுவதற்காக அமைக்கப்பட்ட ஏணி படிகள், 3 மின் கம்பங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. 

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சீராக இல்லாததால் இன்று 7வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close