சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி முதலமைச்சர் பழனிசாமி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தன்னலமற்ற தியாகிகள் அரும்பாடுபட்டு பேராடி பெற்றுத்தந்த சுதந்திரத்தை போற்றிப் பாதுகாப்பது நமது தலையாய கடமை என்றும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மத, பேதங்களை களைந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து, நம் இந்திய திருநாட்டை வல்லரசு நாடாகவும், தமிழ்நாட்டை நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும் உயர்த்திட உறுதியேற்போம் என கூறியுள்ளார்.
newstm.in