நீலகிரி, கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு!

  அனிதா   | Last Modified : 14 Aug, 2019 02:32 pm
chance-for-heavy-rains-in-nilgiris-coimbatore-and-theni

நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது: "தென்மேற்கு பருவமழை கேரளாவில் மீண்டும் தீவிரம் அடைய உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. குமரி கடல் பகுதியில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரி கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close