மோடியும், அமித் ஷாவும் காஷ்மீர் விவகாரத்தை ராஜதந்திரத்துடன் கையாண்டுள்ளனர் - ரஜினிகாந்த் பேட்டி

  Newstm Desk   | Last Modified : 14 Aug, 2019 08:12 pm
rajinikanth-press-meet

காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும்,  உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ராஜ தந்திரத்துடன் கையாண்டுள்ளனர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், "தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும்,  உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ராஜ தந்திரத்துடன் கையாண்டுள்ளனர். எனவே தான் அவர்களை கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள் என்று கூறினேன்.  

காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்டது. அதனால் தான் அவர்களின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தேன். எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியல் ஆக்கக்கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று பேசினார். 

மேலும், போயஸ் தோட்டம் அரசியல் களத்தின் மையமாக வருமா? என்று செய்தியாளர்கள் கேள்விக்கு, 'பொறுத்திருந்து பாருங்கள்' என தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close