நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.30 கோடி நிவாரண நிதி! - முதல்வர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 14 Aug, 2019 08:54 pm
cm-announced-relief-fund-for-nilgris-district

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிதியினை ஒதுக்கீடு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மனதில் முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் கனமழையால் பகுதியாக சேதமடைந்த 1,225 குடிசைகளுக்கு தலா ரூ.4,100 மற்றும் முழுமையாக சேதமடைந்த 296 குடிசைகளுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையினால் அம்மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி சிலர் உயிரிழந்துள்ளனர். 

தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close