தமிழக போலீசாரை பாராட்டிய டிஜிபி! எதற்கு தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 15 Aug, 2019 09:52 pm
tn-dgp-tripathy-wishes-to-tn-police

காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவ விழாவில் சிறப்பாக பணியாற்றி வரும் போலீசாருக்கு தமிழக டிஜிபி திரிபாதி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் விழா கடந்த ஜுலை 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 17 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அத்தி வரதரை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்தாலும், மிகவும் பாதுகாப்பான முறையில் மக்களை தரிசனம் செய்ய வைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து, அத்தி வரதர் வைபவ விழாவில் பணியாற்றும் போலீசாருக்கு தமிழக டிஜிபி திரிபாதி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறையினர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காக்கும் விதமாக தொடர்ந்து மக்கள் பணியாற்ற போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close