இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தூக்கிட்டு தற்கொலை!

  Newstm Desk   | Last Modified : 16 Aug, 2019 08:24 am
former-indian-cricketer-vb-chandrasekhar-passes-away

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் நேற்று சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

சென்னையில் வசித்து வரும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் நேற்று இரவு தன் வீட்டின் உள்ள அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் வெகுநேரமாகியும் அறையில் இருந்து வெளியே வராததால் வீட்டில் இருந்தவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது தான் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பின்னர், இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து சந்திரசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். சந்திரசேகர் மரணம், கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

வி.பி. சந்திரசேகர் 1988 முதல் 1990 வரை இந்திய அணிக்காக 7 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்துள்ளார். இந்திய அணி தேர்வுக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது இவருக்கு சென்னையில் சொந்தமாக கிரிக்கெட் அகாடமி ஒன்று உள்ளது. காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளறாகவும் உள்ளார். 

இவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close