தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!

  அனிதா   | Last Modified : 17 Aug, 2019 08:43 am
rain-in-tamil-nadu

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்றிரவு முதல் பரவலாக  மழை பெய்து வருகிறது. 

வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தி.மலை. வேலூர், தருமபுரி, சேலம், நாகை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, நெல்லை, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், நேற்றிரவு முதல் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், மழை பெய்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close