முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை யாருக்கும் தெரியாது: ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 17 Aug, 2019 09:20 pm
dmk-leader-mk-stalin-says-about-cm

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாதுகாப்பின்றி தனியாக சென்றால் அவரை யாருக்கும் அடையாளம் தெரியாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "முதல்வர் பழனிசாமி எங்கேனும் பாதுகாப்பின்றி தனியாக சென்றால் அவரை யாருக்கும் அடையாளம் தெரியாது. யாராவது ஒருவர் முதல்வர் வந்துள்ளார் என்று கூறினால் தான் அவரைப் பற்றி தெரியும். அதே நேரத்தில் நான் கிராமங்களுக்கு சென்று மக்களுடன் நேரடியாக உரையாடி உள்ளேன். எனவே, அனைவருக்கும் என்னைத் தெரியும். கஜா, ஒகி புயல் பாதிக்கப்பட்ட பகுதியில் கூட அவர் நேரில் சென்று பார்வையிடவில்லை. அதேபோன்று, தற்போது கனமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கும் அவர் செல்லவில்லை" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close