ஆவின் பால் விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

  Newstm Desk   | Last Modified : 17 Aug, 2019 09:38 pm
dmk-mk-stalin-condemned-for-milk-rate-rise

ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, பசும்பால் கொள்முதல் விலை ரூ. 4 உயர்ந்து ரூ.32 - க்கும், எருமைப்பால் கொள்முதல் விலை ரூ. 6 உயர்ந்து ரூ.41-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதையடுத்து, பால் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வின் பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தரமான பால் விநியோகத்தை உறுதி செய்யவே விலை உயர்வு என்று அரசு கூறுகிறது. தரமான விநியோகம் என்பது அரசின் கடமை. கடமை தவறிய அதிமுக அரசு, சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close