கமல் சினிமாவில் மட்டும் தான் முதல்வராக முடியும்: செல்லூர் ராஜு

  Newstm Desk   | Last Modified : 17 Aug, 2019 09:52 pm
minister-sellur-raju-press-meet

கமல்ஹாசன் சினிமாவில் மட்டுமே முதல்வராக முடியும் என்று தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் புதிதாக அமைக்கப்பட உள்ள தார்ச்சாலைக்கான பூமி பூஜை விழாவில் தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். பின்னர் மதுரை காளவாசல் பகுதியில் வீடுகளுக்கே சென்று குப்பை சேகரிக்கும் 99 வாகனங்களையும் தொடங்கி வைத்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கமல்ஹாசன் சினிமாவில் மட்டும் தான் முதல்வராக முடியும். தேர்தல்களின் முடிவுகள், மக்கள் அவரை தலைவராகப் பார்க்கவில்லை என்பதையே காட்டுகிறது. வரும் தேர்தல்களில் அவரது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். முழு அரசியலில் இறங்கியதாக கூறும் அவர் தற்போது சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close