குப்பை இருந்த இடத்தில் வண்ணக்கோலம் : நகராட்சி நிர்வாகத்தின் நூதன முயற்சி!

  Newstm Desk   | Last Modified : 18 Aug, 2019 10:34 am
manaparai-municipal-administration-s-new-initiative

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி  இன்று 14 வது வார்டு காந்தி நகர் பகுதியில் மக்கள் குப்பைகளை கொட்டி வந்த இடத்தை நகராட்சி துப்புறவு பணியாளர்கள் அப்புறப்படுத்தி தூய்மை படுத்தினர்.

பின்னர் அந்த இடத்தில் கோலம் வரைந்து இனி குப்பைகளை இங்கு கொட்டக் கூடாது என்றும் கோலத்தால் எழுதினர். இதுமட்டுமின்றி அந்த பகுதி மக்களை அழைத்து இனி குப்பைகளை பொதுமக்கள் வீடுகளிலேயே பிரித்து துப்புறவு பணியாளர்கள் தினமும் வரும் போது வழங்கிட வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

மேலும் தூய்மை இந்தியா உருவாக்கிட முதலில் மக்களின் ஒத்துழைப்பு தான் இன்றியமைதான ஒன்றாகும் என்றும் வலியுறுத்தினர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close