குளத்தை தூர்வாரும் பணியில் களம் இறங்கிய பொதுமக்கள்: 15 ஜே.சி.பியுடன் அணிவகுப்பு

  அனிதா   | Last Modified : 18 Aug, 2019 01:23 pm
civilians-are-in-the-process-of-cleaning-the-pond

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள குளத்தை சுத்தப்படுத்த பொதுமக்களே களத்தில் இறங்கியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சுமார் 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து குளத்தை சுத்தம் செய்யும் பணியை கையில் எடுத்துள்ளனர். 

குளத்தை அதிகாரிகள் சுத்தம் செய்யும் வரை வேடிக்கை பார்க்கமால், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களே முயற்சி எடுத்து 15 ஜே.சி.பிக்களுடன் அணிவகுத்து குளத்தை தூர்வார சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இவர்களது முயற்சி மற்றும் ஈடுபாடு மற்ற  இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close