மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு:  ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 18 Aug, 2019 09:30 pm
mettur-dam-to-be-filled-soon-jal-shakti-ministry

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதையடுத்து, அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது என்று ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சேலம் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 114.05 அடி நீர் நிரம்பியுள்ளது. 84.29 டி.எம்.சி நீர் உள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 20,000 கன அடியிலிருந்து 30,000 கன அடியாக நீர்வரத்து உயர்த்தப்பட்டுள்ளது. அத் நேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 

இந்த நிலையில், அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சேலம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது என்று ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அணையின் நீர் இருப்பை கண்காணித்து நீரை வெளியேற்றவும் அறிவுறுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close