முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் தொடக்கம்..!

  அனிதா   | Last Modified : 19 Aug, 2019 11:49 am
chief-minister-s-special-defects-solving-plan-started

தமிழகத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் நேரடியாக சென்று, மக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில், 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, இன்று  சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பெரிய சோரகை பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் கோவிலுக்கு வந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து நங்கவள்ளியில், பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர், " நகரங்கள், கிராமங்களில் நேரடியாக சென்று மனுக்கள் பெறப்படும் என்றும் 234 தொகுதிகளிலும் சிறப்பு குறை தீர்வு திட்டம் தொடங்கப்படுவதாகவும்  தெரிவித்தார். மேலும் பொதுமக்களின் மனுக்கள் கணினியில் பதியப்பட்டு ஒரு வாரத்திற்குள் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பப்படும் என்றும், ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் உறுதிபட தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close