ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள்  உள்ளே!

  கண்மணி   | Last Modified : 21 Aug, 2019 12:59 pm
1-38-of-teachers-pass-in-tet-examination

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள்  முடிவுகள் வெளியாகியுள்ளன.  இந்த முடிவுகளின் படி தேர்வு எழுதிய ஆசிரியர்களில்  1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில்  மொத்தம் 1,62, 313 ஆசிரியர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வில் அதிகபட்சமாக 99/ 150 மதிப்பெண்ணும், குறைந்த பட்சமாக 1/150 மதிப்பெண்ணும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல் தாளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி  தேர்வு எழுதியவர்களில் 2250 பேர் 75 மதிப்பெண்களும், 843 பேர் 80 மதிப்பெண்களும், 72 பேர் 90 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 

மேலும் தேர்வு எழுதிய 1,62,313 ஆசிரியர்களில் 1,60,002 ஆசிரியர்கள் தோல்வியடைந்துள்ளனர்.  அதாவது 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். மீதமுள்ள 98.62%ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். 

ஆசிரியர்களில் தகுதி தேர்விற்கான முடிவுகள் பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தையும், நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close