கார்த்தி சிதம்பரத்தின் மீதான வழக்கிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

  Newstm Desk   | Last Modified : 21 Aug, 2019 08:18 pm
karti-chidambaram-case-hearing-at-madras-high-court

கார்த்தி சிதம்பரத்தின் மீதான வருமான வரித்துறை வழக்கில் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

2015 -16 ஆம் நிதியாண்டில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி முட்டுக்காட்டில் 1.18 ஏக்கர் நிலம் விற்ற வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்று கூறி வருமான வரித் துறை வழக்கு தொடர்ந்திருந்தது. சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், இந்த சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கிற்கு தடை கோரி கார்த்தி சிதம்பரம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி ஆதிகேசவலு ஆதிகேசவலு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close