'டெட்' தேர்வில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி!

  அனிதா   | Last Modified : 22 Aug, 2019 08:51 am
only-1-passed-the-tet-exam

ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் இரண்டாம் தாள் தேர்விலும் ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். 

ஆசிரியர் தகுதி தேர்வு எனப்படம் "டெட்" தேர்வு கடந்த ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஜூன் 8ஆம் தேதி நடந்த முதல் தேர்வு1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டது. இந்த தேர்வினை 1,62,314 பேர் எழுதினர். ஜூன் 9 ஆம் தேதி 6 முதல் 8 ஆம் வகுப்புக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை 3,79,733 பேர் எழுதினர். 

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு முடிவுகளை  ஆசிரியர் தேர்வு ஆணையம் சற்றுமுன் வெளியிட்டது. இதில் 324 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏற்கனவே முதல் தாள் தேர்விலும் வெறும் 1.38 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், 2 ஆம் தாள் தேர்விலும் 1சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளதாக ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close