இஸ்ரோவில் ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசம் இல்லை: சிவன்

  அனிதா   | Last Modified : 22 Aug, 2019 10:17 am
there-is-no-difference-between-men-and-women-in-isro-shivan

இஸ்ரோவில் ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசம் இன்றி திறமையானவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " இஸ்ரோவில் ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசம் கிடையாது. திறமையானவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார். வரும் காலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பெண்கள் தலைமை வகிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறினார். 

நிலவின் சுற்றுபாதையில் சுற்றிவரும் சந்திராயன் 2 வரும் செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு நிலவில் தரையிறக்கும் முயற்சியை இஸ்ரோ ஆரம்பிக்கும் எனவும், தரையிறங்கும் போது சந்திராயன் 2 வேகம் முற்றிலுமாக குறைக்கப்பட்டு நிலைநிறுத்தப்படும் எனவும் சிவன் தெரிவித்தார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close